இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்

Share

கால்பந்து உலக கோப்பையை 1966ம் ஆண்டு வென்ற இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ‘பிக் ஜாக்’ என்று அழைக்கப்படும் வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஒரே முறைதான் வென்றுள்ளது.

இங்கிலாந்தில் 1966ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி முதல் முறை சாம்பியன் ஆனது.அந்த அணியில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் பலரையும் ஈர்த்தவர்கள் சகோதரர்கள் ஜாக் சார்ல்டன், பாபி சார்ல்டன். அதில் மூத்தவரான ஜாக் சார்ல்டன் (85) மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.

வடக்கு இங்கிலாந்தில் உள்ள நார்தம்பர்லேண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமான ஜாக் சார்ல்டனுக்கு இங்கிலாந்து கால்பந்து சங்கம், கால்பந்து வீரர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து தேசிய அணிக்காக 35 போட்டிகளிலும், லீட்ஸ் யுனைடட் கால்பந்து கிளப்புக்காக 629 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். ஓய்வுக்கு பிறகு அயர்லாந்து தேசிய அணிக்கும், பல்வேறு கால்பந்து கிளப்களுக்கும் பயிற்சியாளராக பணியாற்றினார்.

Leave A Reply