புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

Share

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பு செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் செயற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இனவழிப்பு தொடர்பான கண்காட்சி ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், 30 ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 6 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply