5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

Share

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் எனவும் திருப்பூர், தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply