தமிழகத்தில் கோயில்கள் திறக்கக்கோரி போராட்டம் !

Share

தமிழகத்தில் இரண்டாவது அலை காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஜூன் மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தளங்கள், கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் போக்குவரத்து சேவை, ரயில் சேவை ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன, அதேசமயம் குறையாத மாவட்டங்கள் மாவட்டங்களில் தளர்வுகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

'தலைகீழாய் நின்றும்; கற்பூரம் ஏற்றியும்' தமிழகத்தில் கோயில்கள் திறக்கக்கோரி போராட்டம் !

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பக்தர்கள் வழிபட கோயில்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைகீழாக நின்றும், ராமேஸ்வரத்தில் கற்பூரம் ஏற்றி தோப்புகரணம் போட்டும் போராட்டம் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பழனி பாத விநாயகர் கோயில் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

'தலைகீழாய் நின்றும்; கற்பூரம் ஏற்றியும்' தமிழகத்தில் கோயில்கள் திறக்கக்கோரி போராட்டம் !

வரும் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு தளர்வுகள் அளிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை ஈடுபட உள்ள மு.க. ஸ்டாலின், கொரோனா குறைந்த மாவட்டங்களில் பேருந்து சேவை மற்றும் கோயில்கள் திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

Leave A Reply