மனைவி இறந்த வேதனையில் கணவர் மயங்கி விழுந்து பலி!

Share

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே மனைவி இறந்த வேதனையில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (75). நெசவு தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (65). பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில், தம்பதியினர் இருவரும் தனியே வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த முத்துலட்சுமி, நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு உறவினர்கள் எடுத்துச்சென்றனர். அப்போது, மனைவியை பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்று கூறிவாறு தங்கராசு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, தம்பதியினர் இருவரது உடலையும் உறவினர்கள் ஒன்றாக அடக்கம் செய்தனர். மரணத்திலும் தம்பதியினர் இணை பிரியாதது, அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave A Reply