“தமிழகத்தின் உரிமைகளை மீட்க உங்கள் குரல் ஒலிக்கட்டும்” – நடிகர் சூர்யா வாழ்த்து!

Share

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நடிகரும் அகரம் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான சூர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கூறியதை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “’முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைக் கட்டி முன்நிற்க, சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ‘மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். 

தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். 

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Leave A Reply