திருவாரூர் செல்லும் ஸ்டாலின்

Share

முதல்வரான பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் செல்கிறார்.

“முத்தான முதல் 30 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகள்..!” : சிறப்பு செய்தி தொகுப்பு !

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாளை மாலை திருவாரூர் செல்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லம், காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஜூலை 7ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு முதல்வரான பிறகு ஸ்டாலின் செல்வது அங்குள்ள மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply