மதுரை வரை புயலின் தாக்கம் இருக்கும்- அமைச்சர் தகவல்

Share

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலை சமாளிக்க தேவையான நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்றார்.

மேலும், “நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருப்பதாக” கூறியுள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் அதீத கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply