மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு படுதோல்வி – A.MEERAN

Share
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாக்பூர் மாவட்ட பஞ்சாயத்து சமுதி தேர்தல் களில் பாஜக ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியை பிடிக்க முடியவில்லை
அங்கு மொத்தமுள்ள 13 இடங்களில் 8 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. இரண்டு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. எனவே பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் அவர்களின் சொந்த மாவட்டம் நாக்பூர் .
துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களின் சொந்த மாவட்டம் நாக்பூர் .
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களின் சொந்த மாவட்டம் நாக்பூர் .
எல்லாவற்றிற்கும் மேலாக RSS அமைப்பின் தலைமையிடம் நாக்பூர் .அங்கு தற்போது பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
மற்றும் ஒரு தோல்வி பாஜகவிற்கு இன்று ஏற்பட்டுள்ளது மும்பையிலே அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது .வருகிற நவம்பர் 3 அன்று இடைத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது .உத்தவ் Thakkerey சிவசேனா கட்சி வேட்பாளருக்கு வேட்பாளர் Rituja ladke அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. எதிர்த்து பாஜக தன் வேட்பாளரை சிவசேனா முதல் அமைச்சர் ஷிண்டே ஆதரவுடன் நிறுத்தியது .
உளவுத்துறை அளித்த தகவலின் படி அந்த இடத்தில் குஜராத்தி மார்வாடிகள் ஓட்டுக்கள் அதிகம் இல்லை .சிறுபான்மை இஸ்லாமிய கிறிஸ்தவர் மற்றும் மராட்டி மொழி பேசும் மக்கள் ஏராளமாக உள்ளதால் அந்தத் தேர்தலில் பாஜக மிகக் குறைவான வாக்குகளை பெற முடியும் என்று உளவுத்துறை தெரிவித்த காரணத்தினால் தேர்தலில் தோல்வியடைவதைவிட அந்த தேர்தலில் கௌரவமாக இறந்தவரின் மனைவிக்கு வழி விட்டு ஒதுங்குகிறோம் என்று சொல்லி ஒதுங்குவது போல இன்று பாஜக வேட்பாளர் தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
ஆக அங்கு சிவசேனா உத்தவ் அணி காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெறுவதும் உறுதியாகி இருக்கிறது.

Leave A Reply