ஈவிரக்கமின்றி மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த கணவர்

Share

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், பச்சையம்மன் தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சுரேஸ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு பச்சையம்மாள் வந்த நிலையில், அங்கு வைத்து மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, சுரேஷ் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

Leave A Reply