அன்னை தெரஸா உருவாக்கிய ஆதரவற்றோர் மற்றும் தொழுநோயாளிகள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு உதவிகளை மோடி அரசு நிறுத்தியது. மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வெளிநாட்டு நிதி பெறுவதை கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறும் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில் ஒடிஸாவில் உள்ள அன்னை தெரஸா நிறுவனங்கள் மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கிற்கு வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து அவர் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 78 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார். அத்துடன் மாவட்ட ஆட்சியர்கள் இந்த நிறுவனங்களின் தேவைகளை கவனித்து உதவும்படியும் கேட்டுள்ளார்.