ரகளையான வேட்பு மனு தாக்கல்

Share

*கண்ணகியின் காற்சிலம்போடு நூதன முறையில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பொறியியல் பட்டதாரி பெண்*

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மதுரை மாநகராட்சியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி 78வது வார்டு கோவலன் நகரில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான மதுமிதா அசோகன் என்ற பெண் வேட்பாளர் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் 78 வது வார்டில் போட்டியிட உள்ளார். இவர் மதுரை மாநகராட்சி மண்டலம் 4ல் மதுரையை எரித்த கண்ணகியின் காற்சிலம்பை கையில் வைத்துக்கொண்டு நூதன முறையில் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

மதுரை மாநகராட்சி 11- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெங்கிஸ்கான் தேர்தல் நடத்தும் அலுவலர் சேகரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுரையில் 93வார்டு சுயேச்சையாக போட்டி,இளைஞர் படையுடன் வேட்புமனுத்தாக்கல்

மதுரை மாவட்டம் உள்ளாட்சித் தேர்தலில் பசுமலை சார்ந்த 93 வார்டு கவுன்சிலர் பதவிக்கு ,இளைஞர் அணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து தன்னுடைய இளைஞர் படையுடன் மதுரை மாநகராட்சி மண்டலம்4ல் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் அவர்கூறிதாவது எங்கள் வார்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும், நவீன வசதிகள் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை செய்தும், மற்றும் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வாங்கித் தருவேன் என்று கூறினார்.

Leave A Reply