ஓபிஎஸ் வழியைப் பின்பற்றும் ஆர்.பி.உதயகுமார்

Share

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது.

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானாலும் தலைமை சர்ச்சை தொடர்வதால் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவை அதிகரித்து வரும் இருவரும் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தொடர்ந்து போட்டா போட்டி நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18-ந் தேதி ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்தார். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோவிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.

பின்னர் அங்குள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 5 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

அரசியலில் ஏற்பட்டுள்ள இழுபறியை சீர்படுத்திடவும், இதுதொடர்பான சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கவும் ஓ.பன்னீர் செல்வம் இந்த சிறப்பு யாகங்களை நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply