செப்.1 முதல் பள்ளிகளை திறக்க திட்டம் -தமிழக அரசு

Share

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிகப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

50 சதவீத மாணவர்களுடன் மேற்கண்ட பள்ளி மாணவர்களுக்கான வகுப்பை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மருத்துவ கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply