பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு

Share

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு பத்திரிகையாளர் நலன்களை காக்க, பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்புக்கு ஏற்ப, உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து இந்த வாரியம் செயல்படுத்தும். அத்துடன் நலவாரிய உதவித் தொகைகள், மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையிலும் இந்த பத்திரிகையளர் நல வாரியம் செயல்படும்.

பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பயனாளிகளைத் தேர்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக பத்திரிகையாளர் நலவாரியக் குழு ஒன்றையும் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
அந்தக் குழுவில் இடம்பெற்றோர் விவரம் வருமாறு…

இதையடுத்து, பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதாகவும், மேற்படி நலவாரியக் குழுவே இனி, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply