ராஜபக்சாக்கள் பணக்காரர்களானது எப்படி? அம்பலப்படுத்தும் அமெரிக்கா

Share

இலங்கை மக்களின் பணத்தில் ராஜபக்ச குடும்பம் தங்களை வளப்படுத்திக் கொண்டது என அமெரிக்காவின் செனட்டர் பற்றிக் லீஹி தெரிவித்துள்ளார்.

இரக்கமின்றி தங்கள் எதிரிகளை மௌனமாக்கியதுடன், இனப் பதற்றங்களைத் தூண்டி, நாட்டைப் பொருளாதாரச் சீர்குலைவுக்குள்ளாக்கியது எனவும் அவர் சாடியுள்ளார்.

பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் துஷ்பிரயோகத்திற்குப் பின்னர், இலங்கைக்கு இன சகிப்புத்தன்மை, சமமான பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றில் அர்ப்பணிப்புள்ள அரசாங்கம் தேவை.

அது அமெரிக்கக் கொள்கையின் மையமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர், செனட்டர் பொப் மெனண்டஸ் உட்பட பல அமெரிக்க செனட்டர்கள், ராஜபக்ச குடும்பத்தின் கீழ் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒரு விரிவான சர்வதேச அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கும் செனட் தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.

Leave A Reply