100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது – சக்திகாந்த தாஸ்

Share

கொரோனாவால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனா என்பது கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். போரில்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருகிறது. இது உற்பத்தி, வேலை வாய்ப்பு துறைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இது உலகெங்கிலும் உள்ள வேல்யூ சங்கிலிகள், தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்களை முடக்கியுள்ளது. நமது நிதி அமைப்பைப் பாதுகாக்கவும், தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வளர்க்கவும், ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், 2019 பிப்ரவரி முதல், ஒட்டுமொத்த அடிப்படையில், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, என தெரிவித்துள்ளார்.

Leave A Reply