மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைவு!

Share

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,118 கனஅடியில் இருந்து 2,504 கனஅடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.58 அடியாகவும், நீர் இருப்பு 66.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இதனிடையே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12- ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply