சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குத‌ல் – ஃபாசில் ஃப்ரீமேன் அலி

Share

நியூயார்க் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மேடையிலேயே தாக்கப்பட்டு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

“முர்த‌த்” என்று தீர்ப்ப‌ளிக்க‌ப்ப‌ட்டு 1980 களில் ஈரானில் இருந்து மரண அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்க‌ப்ப‌டட்டிருந்த‌ எழுத்தாளர் ருஷ்டி, மேற்கு நியூயார்க்கில் விரிவுரை செய்யவிருந்தபோது, வெள்ளிக்கிழமை காலை தாக்கப்பட்டார்.

அசோசியேட்டட் பிரஸ் நிருபரொருவ‌ர் மேடையைக்கு சென்று ருஷ்டியோடு அறிமுகமாக‌ விழைந்த‌போது அவரை ஒரு ந‌ப‌ர் தாக்குவ‌தை க‌ண்டு உத‌விக்குர‌ல் எழுப்பினார். அதைத் தொட‌ர்ந்து அந்த நபர் செக்யூரிட்டிக‌ளால் கட்டுப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நியூயார்க் மாநில காவல்துறை அறிக்கை வெளியிடப்பட்டது, அதில் ருஷ்டிக்கு “கழுத்தில் க‌த்தியால் குத்த‌ப்ப‌ட்ட‌ காயம் ஏற்பட்டுள்ள‌து. அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இருப்பினும் அவரது உடல்நிலை இன்னும் அபாய‌க‌ட்ட‌த்தை க‌ட‌க்க‌வில்லை” என்று கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

அசோசியேட்டட் பிரஸ் நிருபர் எடுத்த புகைப்படங்க‌ள், ருஷ்டி முதுகிலும் க‌ழுத்திலும் ச‌ர‌மாரியாக‌ குத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தை காட்டுகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை துரித‌ப்ப‌டுத்த‌ ருஷ்டியின் கால்கள் அவரது மார்புக்கு மேலே உய‌ர்த்த‌ப்ப‌ட்டிருந்த‌தும் தெரிகிற‌து.

ருஷ்டியியை நேர்காணல் செய்ய‌ இருந்த‌ நெறியாள‌ரும் தாக்க‌ப்ப‌ட்டிருக்கிறார். அது அவ‌ர் ருஷ்டியை காப்பாற்ற‌ முய‌ல்கையில் ஏற்ப‌ட்ட‌ சிறிய காயமே என்று போலீசார் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

மேற்கு நியூயார்க் மாநிலத்தில் உள்ள Erie க்கு அருகில் உள்ள Chautauqua நிறுவனத்தின் அர‌ங்கில் காலை அமேரிக்க‌ நேர‌ம் காலை 11 மணிக்கு ச‌ற்று முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ள‌து.

14 நாவல்களை எழுதியுள்ள‌ ருஷ்டி, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் பிற ச‌மூக‌ செய‌ல்பாட்டாள‌ர்க‌ளுக்கு அமெரிக்கா புக‌லிட‌ம் அளிக்க‌வேண்டிய‌தின் அவ‌சிய‌ம் ம‌ற்றும் முக்கியத்துவம் பற்றி பேச அழைக்கப்பட்டிருந்தார்.

“கறுப்பு முகமூடி அணிந்த ஒருவர் மேடைக்கு விரைந்து சென்று மேடையில் அமர்ந்திருந்த ருஷ்டியைத் தாக்கத் தொடங்கினார்” என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். அர‌ங்கில் இருந்த‌ ஓய்வுபெற்ற பத்திரிகையாளரான Buffalo News நிறுவ‌ன‌த்தின் Paula Voell, இந்த‌ தாக்குதல் ச‌ம்ப‌வ‌த்தை “கொலைவெறித் தாக்குத‌ல்” என்கிறார்.

ச‌ல்மான் ருஷ்டியின் The Satanic Verses என்ற புத்தகம் 1988 ஆம் ஆண்டு முதல் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளது. ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி ருஷ்டிக்கு மரண த‌ண்ட‌னை விதித்து ஃபத்வா என்ற‌ இஸ்லாமிய‌ மார்க்க‌த்தீர்ப்பை வெளியிட்டார். “யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ச‌ல்மான் ருஷ்டியை கொல்ல‌லாம்” என்ப‌தே அந்த‌ தீர்ப்பு.

மேலும் ருஷ்டியை கொல்பவருக்கு USD $3 மில்லியனுக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் கோமேனியால் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

ருஷ்டி அந்த நேரத்தில் அந்த அச்சுறுத்தலை முற்றிலும் நிராகரித்தார், “வெகுமதிக்காக‌ என்னை கொல்லும‌ள‌வுக்கு இஸ்லாமிய‌ மக்கள் ச‌கிப்புத்த‌ன்மை அற்ற‌ காட்டுமிராண்டிக‌ள் இல்லை” என்றார் அவ‌ர்.

இத‌ற்குமேல் என்ன‌ சொல்வ‌தென்று என‌க்கு தெரிய‌வில்லை.

Fazil Freeman Ali

Leave A Reply