புதுவையில் பரவும் வைரஸ் காய்ச்சலால் தமிழ்நாட்டிற்கும் ஆபத்து – 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை விடலாமே?

Share

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. அதிலும் பள்ளிக் குழந்தைகளிடையே இந்த காய்ச்சல் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தக் குழந்தைகள் வழியாக பிற குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் காய்ச்சல் பரவுகிறது. தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் அவர்கள் காய்ச்சலுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் புதுவையில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்து அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

புதுவையை ஒட்டிய பகுதி என்பதால் தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்வு அவசியம் இல்லை என்ற நிலையில் இங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதே சிறந்த முடிவாக இருக்கும்.

 

செப்டம்பர் 26 முதல் தேர்வு என்று அறிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிப்பது குறித்து அரசு விரைவாக முடிவெடுத்து, விடுமுறை அளிப்பதே நல்ல முடிவாக இருக்கும் என்று கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply