தென் கொரியா தலைநகரில் இந்தியர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

Share

தென்கொரியா தலைநகர் சியோலில் அங்குள்ள செஜாங் பல்கலைக்கழக (Sejong University, South Korea) விளையாட்டு மைதானத்தில், சியோல் சூப்பர் கிங் அணி சார்பில் இந்திய மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. (Seoul-indians-cricket-Sejong University)

தென்கொரியாவின் பல பாகங்களில் இருந்தும் 12 இந்திய அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியை நடத்துவதில் முக்கிய பங்காற்றியது.

போட்டியில் ஒய்யூ லெவன் அணி கோப்பையை வென்றது. ரைசிங் ஸ்டார் அணி இரண்டாமிடத்தை பெற்றது.

ஒய் யு லெவன் அணி தலைவர் அந்துவன் ராஜேஷ், துணைத்தலைவர் சண்முகம், ரைசிங் ஸ்டார் அணி தலைவர் ரவீந்தரன் ஆகியோர் கோப்பையை பெற்றுக் கொ்ண்டனர்.

லோட்டே கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் ஜோன் ஹியாங் ஜி (Joan hyeong Gi…Lotte credit card) கொரியா தமிழ்சங்க தலைவர் ராமசுந்தரம், சியோல் சூப்பர் கிங் அணித்தலைவர் சந்த்ரு ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினார்கள்.

பாம்பே ப்ரவ், சியோல் சக்ரா இண்டியன் ரெஸ்டாரண்ட், கொரியா தமிழ்ச் சங்கம், லோட்டே கிரெடிட் கார்டு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்தார்கள்.

சியோல் சூப்பர் கிங்க அணி சார்பில் நன்கொடை வழங்கப்பட்டன. இந்த நன்கொடைத் தொகை தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கப்படும் என்று சரண் கோவி அறிவித்தார்.

நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆரோக்கியராஜ், சந்த்ரு, பாலா,விக்னேஷ் ரவி, சாரா, ஷிவா, ராஜா, கோபி, தவ்கிர், நரேந்தர், சந்தோஷ், வெங்கி உள்ளிட்டோர் உதவியாக இருந்தனர்.

நிகழ்ச்சியை நடத்துவதற்கு விளையாட்டு மைதானத்தை வழங்கிய செஜாங் பல்கலைக்கழக (Sejong University) நிர்வாகத்துக்கு சியோல் சூப்பர் கிங் அணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply