சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்துள்ளார் ஷஃபாலி வர்மா….

Share

ஹரியானாவை சேர்ந்த ஷஃபாலி வர்மா, சிறு வயதில் தலைமுடியை வெட்டி, தன்னை தன் சகோதரன் போல் காட்டிக்கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட துவங்கியவர். தனது 9 வயதில், 19 வதிற்கு உட்பட்டவர்களுக்கான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டு பேட்டிங்கில் கைத்தேர்ந்தார். 

கடின உழைப்பால் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சீனியர் பெண்கள் அணியில் தேர்வாகி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அரை சதம் அடித்து, சச்சினின் 30 வருட சாதனையை  முறியடித்துள்ளார். அதோடு இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு முன்னாள் வீரர் சேவாக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார். 
 

ஷஃபாலி வர்மாவின் கடின உழைப்பு, கிரிக்கெட் மீதான காதல், தனது திடமான குறிக்கோள் ஆகியவை தற்போது உலகமே அவரை திரும்பி பார்த்து வியக்கும் நிலையில் கொண்டு நிறுத்தியுள்ளது. 

Leave A Reply