பட்ஜெட்டுக்கு விவசாயிகள் கண்டனம்

Share

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கே.வி.ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது-

ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு, குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமற்றம் தரும் வகையில் உள்ளது.

எல்லா இந்தியர்களும் அவரவர் சம்பாதிப்பதில் மூன்றில் ஒரு பகுதியை வரியாக அரசாங்கத்துக்கு செலுத்துகின்றோம் எதற்காக? நமது இயற்கை வளங்களை பாதுகாக்க, மக்களுக்குள் நீதியும் சமத்துவத்தையும் கொண்டு வர, பொது சொத்துக்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்யாமல் மக்கள் நலனுக்காக உபயோகிக்க, கல்வி, மருத்துவம், ரோடு, குடிநீர் மற்றும் வேளாண்மை போன்றவற்றுக்கு போதுமான பொது வசதிகள் செய்ய.. ஆனால் இவை எல்லாம் செய்ய தவறிவிட்டது இந்த நிதிநிலை அறிக்கை! ஊழல்தான் இவை அனைத்தையும் தின்கிறது. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கி ஏழையை மிக ஏழை ஆக்குகிறது. ஆக இந்த நிதிநிலை அறிக்கை பொய்யும் புரட்டும் நிறைந்த வெத்துவேட்டு அறிக்கை ஆகும்.

இவ்வாறு கே.வி.ராஜ்குமார் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Leave A Reply