தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Share

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் மேல்முறையீட்டுக்கான சட்ட ரீதியான பணிகளை முடிந்த நிலையில் மேல்முறையீடு செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் மீறி போலீஸ் பந்தோபஸ்துடன் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் அண்டை மாநிலங்களைவிட தமிழகம் மதுபான விற்பனையில் நேற்று சாதனையும் புரிந்தது. மதுக்கடைகளை திறக்க கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. பல்வேறு எதிர்ப்பு, அதிருப்திகளுக்கிடையே 44 நாட்களுக்கு பிறகு 7ம் தேதி சென்னை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பெண்களும், பொதுமக்களும் ஆங்காங்கே இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது நேற்று மதுக்கடைகளில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என்பதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் நீதிபதியின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும். இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் செய்துள்ள மனு தாக்கலில், ‘உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது. ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கின்போது மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பளிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply