தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. வெளியானது வழிகாட்டு நெறிமுறை

Share

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும். அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாதி மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும். முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.


அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை.

வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் இடையே, 6 அடி இடைவெளி கட்டாயமாகும். சூழலுக்கேற்ப திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுகளை நடத்தி பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் உடல்நிலையை வாரத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கொரோனா தொற்றின் நிலை சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் படி, செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply