கொரோனா நிவாரண நிதி 2வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது

Share

14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் ஜூன்-3ல் துவக்கி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு ரூ.4000 நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி முதல் தவணையாக ரூ.2000 கொரோனா நிவாரண நிதியாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா நிவாரண நிதி 2வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் ஜூன்-3ல் துவக்கி வைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.

ஜூன் 3-ல் ரூ.2000 நிவாரணம், மளிகை பொருட்கள் : தமிழக அரசு திட்டம்!

14 மளிகை பொருட்கள் அடங்கிய பை, ரேஷனில் கொரோனா நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

கோதுமை ,உப்பு ,சர்க்கரை ,ரவை ,உளுத்தம் பருப்பு, கடுகு ,மஞ்சள், மிளகாய் தூள் , குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்பு உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply