போலீஸார் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

Share

சேலத்தில் வாகன சோதனையின் போது போலீஸாருடன் வாக்குவாதம் முற்றி போலீஸார் தாக்கியதில் முருகேசன் உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதிஉதவி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் பாப்ப நாயக்கன் பட்டியில் விவசாயி முருகேசனைத்  சாலையில் வைத்துத் தாக்கியதாக  காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,  விவசாயி முருகனைத்  தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விவசாயி முருகேசனைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி உதவி அறிவித்துள்ளார்.

Leave A Reply