மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், வெற்று வாக்குறுதி கொடுத்து காணாமல் போன அடிமைகளுக்கு பாடம் புகட்டிட வேண்டும்மென்றும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும், மேலும் தென்மாவட்ட மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக மதுரையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் பெயரில் அமைக்கப்பட்டு வரும் நூலகம் உள்ளிட்ட 9மாதகால கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
தமிழகம் முழுவதும் கடந்த 8 நாள்களாக பிரசாரம் செய்து வருகிறேன், தி.மு.க-வுக்கு சட்டமன்றத் தேர்தலை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்றார்.