காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

Share

கொரோனா பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.பி வசந்தகுமார் காலமானார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஆகஸ்ட் 11ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வசந்தகுமார் உடல் சொந்த மாவட்டமான கன்னியாகுமரிக்கு எடுத்து செல்லப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். குமரி தொகுதியில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாவை தோற்கடித்தவர். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்தவர் வசந்தகுமார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 1950 ஏப்ரல் 14ல் பிறந்தார் வசந்தகுமார். வசந்த் அன்ட் கோ என்ற நிறுவனத்தை நிறுவி வர்த்தக துறையில் சாதனை படைத்தவர். நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும் 2006ல் தான் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்வானார்.

2016லும் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ல் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ரூ.412 கோடி சொத்து விவரத்தை அறிவித்து தேர்தலில் போட்டியிட்டவர்.

காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்டவர் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா மீதும் மிகுந்த மதிப்பு கொண்டவர் வசந்தகுமார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் இளைய சகோதரர் வசந்தகுமார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் சித்தப்பா வசந்தகுமார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராகவும் இருந்து வந்தவர். வசந்தகுமார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகர் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தவர் ஆவார்.

Leave A Reply