விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Share

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செப்டம்பர் 23ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாத்துக்கு 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சைக்குப் பின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இருவருடைய உடல்நிலையும் நல்ல நிலையில் உள்ளதால் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இரண்டு பேரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் 2 பேரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Leave A Reply