மதுரை மாநகராட்சி தேர்தலில் விஐபிக்கள் வாக்களிப்பு

Share

மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தமது வாக்கினை பதிவு செய்தார்.

மதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிதி மற்றும் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மக்களவை உறுப்பினர்
சு. வெங்கடேசன் தமது வாக்கினை பதிவு செய்தார்.

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கோ. தளபதி திருப்பரங்குன்றம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்புற உள்ளாட்சித்தேர்தல் மதுரை ஆயுதப்படை மைதானம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வாக்கு செலுத்தினார்.

Leave A Reply