விதிவிலக்கான சில விதிமுறைகள்! – Mohammed Smart

Share

நமது வாழ்க்கையில் நடக்கும் சில சுவாரசியமான விதிமுறைகள்…

1.தொலைபேசி விதி…

நீங்கள் தவறுதலாக ஒரு நம்பரை மாற்றி கால் செய்தாலும் அந்த நம்பர் பயன்பாட்டில் இருக்கும் யாராவது ஒருவர் “ஹலோ யாருங்க பேசுறது” என்பர்,

2.கடைத்தெரு விதி…

ஒரு அழகான பொருளையோ அல்லது ஒரு அழகான பெண்/பையனை, பார்த்து… நீங்கள் திரும்ப வந்து பார்க்கும்போது அந்த நபரோ அல்லது அந்த பொருளோ அங்கேயே இருக்காது மாறாக அதே போன்று வேறொரு நபர், வேறொரு பொருள் இருக்கும்.

3.என்ஜின் பழுதுபார்ப்பு விதி…

இது தேராது. இது அவ்வளவுதான் என்று நீங்கள் நினைத்து விற்கும் கார், பைக், மற்றொருவருக்கு கிடைக்கும்போது “என்னா வண்டியா இது செம்மையாக இருக்கு, சூப்பரான மைலேஜ் இதை போய் எப்படி விற்றான்” என்று வாங்கியவரை சொல்ல வைக்கும், அல்லது உங்கள் கைகள் முழுவதும் கிரீஸ் பட்ட பின்னர்தான்  உங்கள் முதுகு, அல்லது மர்ம உறுப்புகள் அரிக்க ஆரம்பிக்கும்,

4.தொழிற்சாலை விதி…

நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும், இடத்தில் சுத்தம் செய்யும்போது மட்டும் உங்கள் கண்ணில் படும்,

5.பொய்க்காரண விதி…

நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன டயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் வாகன டயர் ஓட்டையாகும்.

6.சந்திப்பு விதி…

உங்களுக்கு தெரிந்த ஒருவரை சந்திப்பதற்கான நிகழ்வானது அந்த நபர் உங்களை யாரோடு சேர்த்து காணக்கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு நீங்கள் இருக்கும்போதுதான் அவர் உங்களை அடிக்கடி சந்திப்பார்,

7.தொலைக்காட்சி (Tv) விதி…

உங்களுக்கு பிடித்த ஒரு பாடல் அல்லது உங்களுக்கு பிடித்த காட்சிகள் டிவி.யில் வரும்போதுதான் உங்கள் வீட்டில் மிக்ஸீ ஓடும், முக்கியமான போன் கால் வரும், அல்லது யாராவது ஒருவர் சத்தமாக பேசுவர்,

8.தியேட்டர் விதி…

நீங்கள் தியேட்டர் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்,

9.காபி & டீ விதி…

உங்கள் அலுவலகத்தில் சூடான காபி ஒன்றை பருக அமரும் தருணத்தில்தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். அல்லது டீ கடையில் இந்த டீயை இன்று கொஞ்சம் ருசித்து குடிக்க வேண்டும் என்று நினைக்கையில்தான் உங்களுக்கு தெரிந்த ஒரு நபர் வந்து பேசுவர்,,

10.ஹோட்டல் விதி…

நீங்கள் தனியாக ஒரு ஹோட்டலில் ருசியான சைவ, அசைவ உணவை சாப்பிட்டிருப்பீர், அதே ஹோட்டலில் உங்கள் நண்பர்களை அல்லது உங்கள் குடும்பத்தினரை அழைத்து செல்லும்போது “என்ன ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீக” என்பார்கள்,

“இதெல்லாம் நமது வாழ்க்கையில் எப்போதுமே நடக்கும் சில சுவாரசியமான விதிகள், சிலருக்கு “என்னடா இது நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது” என்று சொல்ல வைக்கும் புத்திசாலிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு நிமிடம் யோசித்து இதுதான் நடக்கப்போகிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தவாறு சூழ்நிலையை மாற்றிக்கொள்வர்,

நாம் காணும் ஒவ்வொரு விதிகளுமே நமக்கு சுவாரசியம்தான் கொடுக்கும், விதியை நினைத்து புலம்பாமல் வருவதை எதிர்நோக்கி மன தைரியத்தோடு வாழ ஆரம்பியுங்கள்.”

Leave A Reply