கலாம் வேடம் போட்டு வாக்கு சேகரிப்பு!

Share

மதுரையில் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போல் வேடமணிந்து நூதன முறையில் வாக்கு சேகரித்த மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கெடுப்பு வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கும் சூழ்நிலையில் மதுரை மாநகராட்சியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது வேட்பாளர்கள் தொடர்ந்து நூதன முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப்பாளையம் 57 வது வார்டு மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக போட்டியிடும் செல்வகணி நடக்கவிருக்கும் தேர்தலில் மக்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும் என்றும்பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் மக்கள் நீதி மையம் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார். மேலும் தங்களது பகுதியில் அதிமுக திமுக போன்ற கட்சிகள் மாற்றி மாற்றி தேர்தலில் வெற்றி பெற்றாலும் எங்களுக்கான அடிப்படை வசதிகள் இதுவரைக்கும் செய்து தரவில்லை இந்த முறை மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக பெரிய மாற்றத்தை மாநகராட்சியில் கொண்டுவருவோம் என்றார் மேலும் இந்நிகழ்வில் தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வைரம் உள்ளிட்ட மக்கள் நீதி மையம் கட்சி பிரதிநிதிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் மேலும் மறைந்த குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் வேடமணிந்து சைக்கிளில் வாக்கு சேகரிப்பது மக்களிடம் வெகுவாக கவர்ந்தது.

Leave A Reply