பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடித்தே தீருவோம் – வீரப்பமொய்லி உறுதி

Share

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்பதால் மதச்சார்பின்மைக்கு வழி சேர்க்கும்.பாஜக தலைமையிலான பிரிவினைவாத சக்திகளை தோற்கடித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி கூறினார்.

திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்ட ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் மேற்பார்வையாளர் வீரப்ப மொய்லி, ‘காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும்.திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும். தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது அவசியம்.சமுத்திரத்தில் அலைகள் ஏற்றம்,இறக்கம் இருப்பது போல் எங்கும் இருக்கும்,’என்றார்.

Leave A Reply