பொன்மகளுக்கு 17 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை

Share

சேலம், மேட்டூர் அணைத் திறப்பிற்காக சேலம் வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மேட்டூர், பொட்டனேரி பகுதியை சேர்ந்த சௌமியா தங்கச் சங்கிலியோடு வேலை வேண்டி மனு அளித்திருந்தார்.

அதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் கடிதம் கவனத்தை ஈர்த்தது.

பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார் முதல்வர்.

பொன்மகளுக்கு 17 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை: இரண்டே நாட்களில் முதல்வர் அதிரடி

சொன்னதுபோல், இம்மனுவின் மீது இரண்டே நாட்களில் முதல்வரின் சீரிய நடவடிக்கையால், தனியார் நிறுவனத்தின் பணி நியமன கடிதத்தை சௌமியாவிடம் நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

17 ஆயிரம் மாதம் சம்பளத்தில் வேலை கிடைத்த நியமன கடிதத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சௌமியா முதல்வரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Leave A Reply