நடைபாதைத் தூரமெங்கும்
நிழல்பரப்பும் மரங்களாக
தொடருகின்ற நினைவுகள்
வெயில்விரும்பி ஓடுகையில்
வெட்டவெளி விரிந்து முன்னால்
சிக்காமல் விரைகிறது
இரவுக்குள் நுழையுமுன்பே
கனவுகளில் வெளிச்சங்கள்…
காய்ந்த அவ்வெய்யில்பொழுது
ஓய்ந்த அவ்விரவின் கட்டில்
இன்றெங்கே எனத்தேடி…
தேடி நடக்கையில்
நீள்கின்ற நிழல்மரங்கள்.