காதல்! – ஆதனூர் சோழன் கவிதைகள்

Share

இதத்தென்றல் என் தேகம் தழுவும் போது
நிதமுன் நினைவென் உள்ளெரிக்கும்.
வெம்மையை மென்மை தழுவும்போது
மயிர்க்கால் அடியில் கூச்சறியும்.

இரவுக்குள் அமிழும்போது
உறவுக்குனை துணையழைக்கும்
உன்உருவைக் கனவில்கண்டு
உள்ளம்சற்று உயிர்பிழைக்கும்.

விழிகளை இமைகள் தாழிடும்போதும்
இதயம் ஏனோ திறந்தபடி
மலர்க்கள மமைத்து உன்னுடன்நான்
மகரந்தக் கவிதை சுரந்தபடி.

உன் சிறுநோவிலும் என்னுளம் நோகும்
புன்சிரிப்பொன்றில் பூரணமாகும்
கறுப்புச்சந்தன தோலின்மீது
வாசம் நுகரும் வாழ்க்கை போதும்!

-Athanur chozhan

Leave A Reply