நாய்களின் பின்னோடும் புலிகள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Share

மருதநிலம் நிலைமறந்து பாலையிடம் கையேந்தும்
சருகுகளின் அழகினிலே கொழுந்துகளும் மனம்மயங்கும்
எரிமலையின் அடிவயிற்றை
மின்மினிகள் கிள்ளிப்பார்க்கும்
உரித்தொங்கும் வெண்ணெய்க்கு
பசுக்களிங்கே தவமிருக்கும்
மிகைவீரம் குருதியிலே கொப்புளித்தும் – தாம்பிழைக்க
பகையாளர் பாதங்களில் சிரம் தாழ்வோர்,

அவர்கள்…

வான்கோழி நடம்ரசிக்கும் மயில்கள்
கிளிஞ்சல்களின் ஒளிபுகழும் முத்துக்கள்
நாய்களின் பின்னோடும் புலிகள்.

Leave A Reply