கானல்களின் கீர்த்தனங்கள்

Share

காதல் நெஞ்சின் ஈரத்திலே
கனவுகளின் கால்தடங்கள்
பாலைவனப் பாதையிலே
மேகங்களின் நிழற்படங்கள்.

பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோ
இமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ!

வாசமலர் தோட்டத்திலே
மஞ்சள்வண்ண மாப்பொடிகள்
நீலக்கடல் மீதினிலே
பொங்கும் நுரைப் பூச்செடிகள்

இரவுகளின் துணையாக நிலவு வந்து சேராதோ
புல்நுனிக்கு மகுடமாக பனித்துளிகள் மாறாதோ!

ஓடும்நதி தீரத்திலே
நாணல்களின் நர்த்தனங்கள்
கோடைவெய்யில் பருவத்திலே
கானல்களின் கீர்த்தனங்கள்

கோவிலிலே சிற்பமொன்று கொலுவிருக்க இணங்காதோ
வேர்களுக்கு மரக்கிளைகள் விழாவெடுத்து வணங்காதோ!

Leave A Reply