அடுக்கடுக்காய்… – ஆதனூர் சோழன் கவிதைகள்

Share

இதயம் தன் துடிப்புகளில்
தன்தேசம் தன்தேசம் என்றொலிக்கும்

பகுத்தறிவுப் பாதைகளில்
பயணம்போ பயணம்போ எனமுழங்கும்

இளையமகன் விழிகளிலே
ஒளியேற்று ஒளியேற்று எனச்சொல்லும்

வருங்காலப் பொழுதுகளில்
வெற்றிதான் வெற்றிதான் என்றென்றும்

வாழும்நாள் தேவைகளை
வளமாக்கு வளமாக்கு தேசமெங்கும்

சமூகத்தின் சரிவுகளை
சமமாக்கு சமமாக்கு எழில்வனமாய்

இனிவரும் முடிவுகளை
இனிதாக்கு இனிதாக்கு எனப்பொங்கும்

மக்களின் எழுச்சிகளை
கிளப்பிவிடு கிளப்பிவிடு நேர்வழியில்.

Leave A Reply