இனி வரும் நாட்கள்..! – கவிஞர் ஜீவி

Share

இனி…

ஓடி களைத்த சலிப்பில்லை,
தேடி சேர்த்த நட்பு உண்டு.

சாடி விரட்டும் பகை இல்லை.
பாடி களிக்க சபை உண்டு.

போடும் புதிய சட்டைகளில்
என் வேர்வை துளியே செண்டாகும்.

ஒவ்வொரு நொடியும்
உயிர்ப்பாக ஒரு வசந்தம்
இனியும் உண்டாகும்.

விரல்கள் பற்றி
குலுக்குவதால் விரியும்
வட்டம் மகிழ்வூட்டும்.

கவிகள் கேட்டு கிறங்கிப் போய்
அன்பர்கள் கூட்டம் தலை ஆட்டும்.

மழையில் நனைந்தால்
சந்தோசம்.
மந்திர புன்னகை என் கோசம்.

மதியை பார்த்து ஹலோ சொல்லி
மகிழும் இரவுகள் கொண்டாட்டம்.

படித்து ருசிக்க புத்தகங்கள்.
பழகி களிக்க நண்பர் குலம்.

குடும்பத்துக்கு செலவழிக்க கூடுதலாக
மணித்துளிகள்.

இனிவரும் நாளும் இன்பம்தான்.
எல்லை எனக்கு இமயம்தான்.

– ஜீவி

Leave A Reply