Home > கவிதை > சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ

சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ

பெய்தது மழை

துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு
கார்மகள் இடியாய் ஒப்பாரியிட!
நெஞ்சங்கலங்கிய முகில்களும்
மின்னலாய் மிரட்டலிட!
காரிருளும் சூழ்ந்தது வானுலகை…
இனியும் தாமதித்தால் ஆபத்து
பயந்த வருணனும்!
பாய்ந்தோடி வந்தான் புவிமீது
சாரலாய் உனைக்காக்க..!

You may also like
சிதறல்கள் – 3 – சகாய டர்சியூஸ் பீ
சிதறல்கள் – 2 – சகாய டர்சியூஸ் பீ

Leave a Reply