உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு!

Share

நடிகரும் திமுக எம் எல் ஏ வுமான உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் கிட்டத்தட்ட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதில் இருந்து தினசரி தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்துவருகிறார்.

இந்நிலையில் உதயநிதி தேர்தலுக்கு முன்னர் தனது வேட்புமனுத்தாக்கத்தில் தன் மீதான குற்றவழக்குகளை சரியாக குறிப்பிடவில்லை என்று தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறிய உதயநிதியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Leave A Reply