சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Share

16ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அன்று நடந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் 3 நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், சபாநாயகர் அப்பாவு 24ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுமென அறிவித்தார்.

அதன் படி, கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவையில் சில சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆளுநர் உரை வெறும் ட்ரெய்லர் தான் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கூட்டத்தொடர் இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில், அவை இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளன.

2019 மார்ச் 31 வரையிலான நிதிநிலை அறிக்கை தொடர்பான தணிக்கை துறையின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நீதிக்கட்சி வரலாற்று தொடர்ச்சியில் திமுக ஆட்சி அமைத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன். அண்ணாவை தொடர்ந்து கலைஞர், கலைஞரை தொடர்ந்து நான் முதல்வராகி இருக்கிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை விளக்க சுருக்கம். ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் தான்; திரையில் முழுநீள படத்தை காண்பீர்கள் என்பதுபோல அனைத்தும் பட்ஜெட்டில் இருக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார். பத்து ஆண்டுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ளோம் என்று உணர்ச்சிவசமாக பேசினார்.

Leave A Reply