அ.தி.மு.க. ஆட்சியே பரவால்லே என்று பெயர் வாங்கும் அவலம் – Ravishankar Ayyakkannu

Share

69% இட ஒதுக்கீட்டில் பணிக்கு வரும் தமிழ்நாட்டு அரசு ஊழியர்கள் வேலையே செய்வது இல்லை, அரசின் பெருவாரியான பட்ஜெட் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கே செல்கிறது என்பது போன்ற பொதுப்புத்தி விகடன் போன்ற ஊடகங்களின் பிரச்சாரத்தால் கட்டமைக்கப்பட்டவை.

பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்து இருந்து திமுக அமைச்சர்களும் இந்தப் பொதுப்புத்திக்கு இரையாகி விட்டார்கள் போலும்!

எப்படி ஒரு கிரிக்கெட் அணியில் Captain  மற்ற வீரர்களை உற்சாகப்படுத்தி அணியை வெல்ல வைக்கிறார்களோ,

அது போலவே ஒரு துறையின் அமைச்சரின் நடிவடிக்கையும் இருக்க வேண்டும்.

மாறாக, circus விலங்குகளை வேலை வாங்கும் ring masterகள் போல் அவர்கள் மாறி விடக்கூடாது. அவ்வாறு ஓதி விடும் அதிகாரிகளின் பேச்சை நம்பலாகாது.

ஒரு அமைச்சர் தலைவரைப் போல் நடந்து கொள்ளவேண்டும். மில் கண்காணி போல் நடந்திடல் ஆகாது. மக்கள் நலம் தான் முக்கியம் என்று அரசு ஊழியர்களை வாட்டி வதைக்கும் அமைச்சர்கள், அரசு ஊழியர்களும் உயிருள்ள  உணர்வுள்ள குடும்பம் குட்டியுள்ள ஓட்டு போட்ட மக்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

தனியாரில் ஒருவரின் உழைப்பைச் சுரண்டித் தான் குறைந்த ஊதியம் கொடுக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் உழைப்பு, படிப்புக்கு உரிய சம்பளம் தருவது அரசின் கடமை.

போராட்டம், கோரிக்கை எல்லாவற்றையும் தாண்டி அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது,

அரசும் அமைச்சரும் தங்களைக் கனிவுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்பதே.

ஒருமையில் அழைப்பது, திட்டுவது, எகத்தாளமாகப் பேசுவது, பொது மக்கள் முன்னிலையில் மட்டம் தட்டுவது, உனக்கு இந்தச் சம்பளமே அதிகம் என்பது போன்ற உரையாடல்களை அரசு ஊழியர்கள் ரசிப்பது இல்லை.

குறிப்பாக, திமுகவுக்காக மாய்ந்து மாய்ந்து ஓட்டு கேட்ட அரசு ஊழியர்கள் வாயாலேயே,

அதிமுக ஆட்சியே பரவாயில்லை என்று பெயர் வாங்குவது அவலநிலை.

திருமணம், பணியிடம் அனைத்திலும் இன்றைய இளைஞர்களின் அணுகுமுறை, எதிர்பார்ப்புகள் நவீன காலத்திற்கானவை.

இதனைத் திமுக அமைச்சர்கள் புரிந்து கொண்டு, தங்கள் சொல்லாடல்கள், அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Leave A Reply