பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை

Share

அதிமுகவினருக்கு சாதகமான பேரூராட்சிகளையும் வார்டுகளையும் குறிவைத்து சுழற்சிமுறையில் தில்லுமுல்லு செய்து மீண்டும் மீண்டும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிட முடியாதபடிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி முதல் 10 ஆண்டுகள் ஆண்களுக்கான தனித்தொகுதியாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகள் பெண்களுக்கான பொதுத்தொகுதியாக இருந்தது. இப்போது மீண்டும் ஆண்களுக்கான தனித்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிடாமல் தடுக்க இந்த ஏற்பாடு என்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட உலகம்பட்டியில் உள்ள 3 வார்டுகளும் ஆண்கள் போட்டியிட முடியாதபடி தொடர்ச்சியாக சுழற்சிமுறையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது ஒரு பேரூராட்சி மட்டுமா? அல்லது தமிழகம் முழுவதும் எத்தனை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இப்படி முறைகேடுகள் நடந்துள்ளன என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதுதொடர்பாக அகரம் பேரூராட்சி வாக்காளர்கள் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் விவரம் வருமாறு…

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி வார்டு மறுசுழற்சி வரையறை சம்பந்தமாக,

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம்,

நான் சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப(IT) நிறுவனத்தில் மென்பொருள் வல்லுனராக (Software Engineer) வேலை பார்த்து வருகிறேன்.

எனது சொந்த ஊரான
திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சியில் அதிமுகவினரின் திட்டமிட்ட சதியால் மறுசுழற்சி வரையறை முறையாக பின்பற்றாமல் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் அதற்கு கட்டுபட்ட உலகம்பட்டியில் உள்ள 3-வார்டுகளும் தற்போது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவரம்:
—————-

பேரூராட்சி தலைவர் பதவி கடந்த 25 ஆண்டுகளாக Reserved(SC) மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பொது பிரிவினருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது Reserved(SC) ஆக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம்பட்டி கிராமத்தில் ஆண்கள் யாரும் போட்டியிட கூடாது என்பதற்காக கடந்த ஆட்சியில் . குறிப்பாக உலகம்பட்டி பழைய வார்டு எண் 13 தற்போதைய வார்டு எண் 7, கடந்த 1996 – 2006 வரை பட்டியலினத்தவருக்கான(Reserved Category) வார்டாகவும், 2006 – 2016 வரை பொது பெண்களுக்கான (General Ladies) வார்டாகவும் இருந்தது. தற்போது பொதுபிரிவினராக வரவேண்டிய 7 வது வார்டு மீண்டும் பெண்களுக்கான வார்டாக கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பாப்பணம்பட்டி கிராமத்தில் உள்ள வார்டு 25 ஆண்டுகாலமாக பொதுபிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யபட்டு வருகின்றது.

எனவே, மாண்புமிகு.முதல்வர் அவர்கள் தயவுகூர்ந்து தேர்தலுக்கு முன்னர் இது போன்ற முறைகேட்டை கண்டறிந்து முறைப்படுத்தி தேர்தலை நடத்திடவேண்டும் என்றும் கிராம பொதுமக்களின் சார்பாக தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave A Reply