மாணவர்களை மிரட்ட இன்னொரு ஆயுதம் தேவையா? – ஆதனூர் சோழன்

Share

மோசமான மாணவர்கள், ஒழுக்கக்கேடான மாணவர்கள் காலந்தோறும் இருக்கிறார்கள்…

அந்த மாணவர்களில் சிலர் காலப்போக்கில் திருந்தியிருக்கிறார்கள்… அல்லது பள்ளிக்கே வராமல் கூலி வேலைக்கோ, ரவுடியாகவோ போயிருக்கிறார்கள்…

மாணவர்களை திருத்தவே பிரம்படி, முட்டிக்கால் போடுவது, பெஞ்ச் மேல நிற்க வைப்பது என்ற தண்டனைகள் இருந்தன…

பெற்றோரை அழைத்துவரச் செய்தும் மாணவனை பற்றிச் சொல்லும் வழக்கமும் அந்த ரகம்தான்…

இதையெல்லாம் வைத்து, கூடுதல் வருமானத்துக்காக டியூஷன் வரச் செய்து வீட்டு வேலைகளை செய்ய வைத்த ஆசிரியர்களை பார்த்தோம்…

டியூஷன் வராத பிள்ளைகளை தண்டிப்பதை பார்த்தோம்…

பிராக்டிகல் மார்க் என்று கொடுத்தார்கள்… அந்த மார்க்கை வைத்து மிரட்டிய ஆசிரியர்களையும் பார்த்தோம்…

இப்போ, சமீபத்திய கொரோனா துயரத்தைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக போகாத நிலையில், மாணவர்கள் அதிலும் கிராமப்புற மாணவர்கள் படுமோசமாக கெட்டுச் சீரழிந்திருக்கிறார்கள்…

அவர்களுக்கு பரீட்சை எழுதாமலேயே பாஸ் போட்டுப் பழக்கிவிட்டார்கள். இப்போது திடீரென்று படிக்கும் பழக்கம் புதுசாக தெரிகிறது அவர்களுக்கு…

ஆசிரியர்களின் மனநிலை

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோக ஆசிரியர்கள் மாணவர்கள் உறவிலும், ஆசிரியர்கள் பெற்றோர் உறவிலும் பாதிப்பு ஏற்பட எம்ஜியாரும் ஜெயலலிதாவும் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆம், மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற உத்தரவை போட்டு, அரசு வருவாயில் பெரும்பகுதியை ஆசிரியர் அரசு ஊழியர்களே சாப்பிடுவதாக பிரச்சாரம் செய்து அவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி, அவர்கள் மீதான மரியாதையையும், அச்சத்தையும் குறைத்தவர்கள் இவர்கள்தான்.

இப்போது டி.சி.யை கொடுப்போம், அடுத்து எங்கேயும் படிக்க முடியாமல் செய்வோம் என்ற ஆயுதத்தை ஆசிரியர்கள் கையில் கொடுத்திருப்பதை ஆசிரியர்களே விரும்பவில்லை.

அன்பில் மகேஷுக்கு எதிரான பதிவு

அவர்கள் எதிர்பார்ப்பது, வழிதவறும் மாணவனுக்கு நல்வழி காட்டும் முறைகளைத்தான். எம்.எட். முடித்த கல்வியியலும், உளவியலும் கற்ற ஆசிரியர் ஒருவரை பள்ளிகளுக்கு நியமிக்க வேண்டும். அவர்கள் வழிதவறும் மாணவர்களை நெறிப்படுத்த முடியும் என்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், அவர் எந்தச் சாதியைக் குறிக்க கயிறு கட்டியிருக்கிறார். நிதியமைச்சர் எதற்காக வண்ணக் கயிறுகளை கட்டியிருக்கிறார் என்று விமர்சனம் செய்கிறார்கள்.

மொத்தத்தில் இளம் மாணவர்களின் மனதில் இந்த அரசுக்கு எதிரான கருத்தையே பதியவைக்கும் இந்த உத்தரவு.

Leave A Reply