முதல்வர் ஸ்டாலின் டெல்லி ப்ளான்

Share

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன்முறையாக நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

முதல்வராக பதவியேற்ற பிறகு டெல்லி பயணம் மேற்கொள்ளும் அவரை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் எம்.பி. டி.ஆர் பாலு ,கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்க திட்டமிட்டுள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் அவருக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர்கள் தங்குவதற்கான தனி சிறப்பு அறையில் ஸ்டாலின் தங்க உள்ளார். அத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சூட்ரூமில் தங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கடைசியாக டெல்லி செல்ல பயன்படுத்திய காரை ஸ்டாலின் பயன்படுத்த உள்ளார். இந்த கார் திமுக எம்.பி. வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனது தந்தையின் காரை பயன்படுத்தி பிரதமலர் இல்லத்திற்கு அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர்களாக இருந்த ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றால் அவர்கள் ஜெயலலிதா அறையில் தங்காமல் அமைச்சர்களுக்கான அறையில் தங்கி வந்தனர். ஆனால் தற்போது ஸ்டாலின் முதல்வராக டெல்லிக்குச் செல்ல உள்ள நிலையில் அவருக்காக அந்த ரூமில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்காக புல்லட் ப்ரூஃப் காரை பிரதமர் மோடி அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமருடனான சந்திப்பில் நீட் தேர்வு ரத்து , மருத்துவ மாணவர் சேர்க்கை, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம் உள்ளிட்ட 35 அம்சங்களை கொண்ட கோரிக்கையை முதல்வர் முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ராஜ்நாத்சிங் ,பியூஸ் கோயல் உள்ளிட்டவர்களை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். அதேபோல ஹர்ஷவர்தன் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாயுடு உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்கிறார்.

Leave A Reply