ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் என்ன? : முதல்வர் ஆலோசனை

Share

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து இரு வாரமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது.

அதாவது, பாதிப்பு குறைவாக இருந்த 27 மாவட்டங்களுக்கு தமிழக அரசு பல தளர்வுகளை அளித்தது. பாதிப்பு அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது.

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் என்ன? : முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 14ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவடையும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அக்கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவையில்லை என்பது குறித்தும் டாஸ்மாக் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

அதே போல, பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply