முதல்வரின் முத்தான செயலாளர் தேர்வு!

Share

உமாநாத் IAS

ரேபிட் கிட் விலையை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் போது அமைச்சர் விஜயபாஸ்கரை நீங்களே விலையை சொல்லுங்கள் என்று கோர்த்துவிட்டவர்.

அனு ஜார்ஜ் IAS

ஆளுங்கட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியமல் அங்கன்வாடி ஊழியர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர். அதனாலயே பழிவாங்கப்பட்டவர்.

சண்முகம் IAS

எடப்பாடியும் உதயகுமாரும் கொள்ளையடிக்க முயன்ற பாரத் நெட் டெண்டரில் முறைகேடு என கையெழுத்து மறுத்து கோப்பை திருப்பி அனுப்பியவர்.

உதயசந்திரன் IAS
• தமிழகத்திற்கே அவமானச்சின்னமாக இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்களை முன்னின்று நடத்தியவர்
• பலநூறு கோடிகள் கல்விக் கடனாக வழங்க ஏற்பாடுசெய்தவர்
• இடஒதுக்கீடு குறித்து சரியான புரிதலை தரும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியர்.

தன்னோட டீம் சரியா இருந்த பாதி வேலை முடிஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்க. முதல்வர் அதைதான் செய்துகிட்டு இருக்கிறார்.

Leave A Reply